மனதில் வலி இருக்க
மது மயக்கம் நீங்காதோ?
**********
மலையேறி எவனோ
மனம் மேகி போக.
மண்ணும் மாசாகி
மனிதம் சாகிறதே!
மதத்தின் பெயரால்
மணம் கெட்ட பழமாக
மனங்கள் சிதைந்திட
மதங்கள் வாழ்கின்றன.
மழையும் பொய்த்து
மரமும் பட்டுப் போனாலும்
மடையர் திருந்தார்.
மன்னவனும் கூட தான்.
மலரும் மணம் வீசி
மலரும் இங்கே பாரும்.
மண் குடித்த நீர்
மனசாற வேர் வழி வர.
மரவுரி உடுத்து அந்த
மங்கை பதி அவனும்
மல்விகை வாசம் வர
மனையா ளதை சூடி வர.
மனிதர் மனமாற ஒரு
மடிந்த இதழ் விரித்து
மனிதராக ஒரு உயிர்
மல்லுக்கு வந்து நிற்க.
மர அணிலும் வாலை
மடிக்க மறந்து வீசிய
மணத்தில் ஓடி வந்து.
படித்தவர் கதை கேட்டதே!
மண்ணில் நிலையாத
மணல் புதையும்
மலமும் கூட உரமாகும்.
மண் இயல்பு காண்போம்.
மறக்க முடியாத
மனக் கசப்புக்கள்
மதுரைக்காரன் போல
மச்சம் கொள்ளனும்.
மனசால் இங்கே ஒரு
மனச்சாட்சி வழி மாறல்
மயங்கிய போதையாக
மதுமயக்கம் நீங்காதோ?
........ அன்புடன் நதுநசி.
30.03.2023
எனினும் நீரில் மீன்.
********
விளைவு தந்த
வியப்புக்கு ஏதும்
ஆச்சரியம் இருக்குமோ?.
ஆடம்பரமற்ற அழகு.
செயல் இருக்கும்.
செய்திடும் ஆற்றல்
அதுவும் இருக்கும்.
அடுத்து என்னவோ?
கொளுத்தும் வெயில்.
கொப்பளித்த மழை.
திட்டித் தீர்த்த மனம்
திகட்டிய போது மௌனம்.
பாராட்டிப் போகும்
பாசம் பார்த்தேன்.
பெரிய மனிதரும் கூட
பெருமைக்கு தானே!
திறமை இருக்கிறது.
திட்டமிட்ட செயலும்
தீர்வு காணும் நோக்கும்
தீர்க்கமான முடிவுகளோடு.
வானத்து நிலவும்
காலைச் சூரியனும்
கதை பேசிய நாட்கள்
கண்டதுண்டு இங்கே!
அங்கே அவை எப்போதும்
கொண்டது இல்லை.
பொறாமை ஒன்றில் ஒன்று.
நின்று கொண்டதும் இல்லை.
இன்று வரை சார்ந்து
நகர்ந்து மெல்லச் செல்ல
காலம் நகர்கிறது.
மூப்பாக்கி எமையிங்கு.
காலைப்பூ மாலை
காணாதிங்கு போகும்.
சிறகடித்த சிட்டும்
மாலை தோனது தேடாது.
தேவை இருக்கும் போது
தேடிவந்த சொந்தம்
தேவை உனக்கு என்றால்
தேடும்படி ஆக்கும்.
செயல் விளைவு நலம்
நன்றி சொல்லும்படி
இருந்த போதும் நீ
நீரில் மீனாக உன் வாழ்வு.
30.03.2023
......... அன்புடன் நதுநசி.
***********
எத்தனை பெரிய
எண்ணங்கள் நமக்கு.
எதற்கு இவையெலாம்?
எண்ணிடத் தோன்றுது.
முன்னோர் சொன்ன
முதுமொழி கற்றேன்.
முன்னகர நடந்தேன்.
முகம் குப்பர விழுந்தேன்.
அடியாளாக வாழ்ந்திட
அரசனுக்கு ஒத்திசைந்திட
அச்சம் கொண்டு வாழ
அசராத துணிவு தந்தது.
கொஞ்சம் கூட அவை
கொடுந்துயர் தரும்
கொடூரம் எதிர்க்க
கொடுக்கை தரவில்லை.
முன் பின்னாக அவர்
முரண் சொன்னதைக் கூட
முதுமொழி கற்றலில்
முன்மொழிந்தது இல்லை.
முற்றும் கோணல்
முழுதும் கோணல்.
முன்னே தடக்கினும்
முதிர்ச்சி அவை தராதே?
சுயமாக நடந்திடச் சொல்லி
சுற்றமும் கூட ஒரு வழி
சுதந்திரம் இங்கே தராதே!
சுவர் போல தடையிட்டு.
போட்டிக்கு பொறாமை
போக்கு இங்கே காட்டாது.
பொறுமை இருந்தும் பாரும்
பொறாமை தானே உந்தும்.
வெற்றி ஒன்றை நாம்
வென்றிட தந்திரம் இல்லை.
திரையிட்டுப் பேசும் போது
திக்கெட்டும் போர் வீரம்.
தேடிய என் தேடலில்
தேங்கிக் கிடந்திட தானே
தோல்வி தான் வெற்றியின்
முதற்படி என்றனர் நம்பிட.
வில்லெடுத்த போர்
வீரம் பேசிய போது
முன்னோர் எலாம் எனக்கு
மூதறிஞர் போலிருந்தனரே!
அன்று சொன்னவை
இன்று பொருந்தின்
என்றும் நலம் என தேடி
உன்று ஊன்றிய சிந்தை.
.........அன்புடன் நதுநசி
31.03.2023
Post a Comment