மருத்துவமனையில் சாய்ரா பானு
ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு மருத்துவமனையில் அனுமதி. அவருக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
.ஏ.ஆர். ரகுமானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு மருத்துவ அவசரநிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சாய்ராவின் உடல்நிலை குறித்த செய்தியை அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான அந்த அறிக்கையில், "கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாய்ரா, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சவாலான நேரத்தில் விரைந்து குணம் பெறுவதில் அவரது முழு கவனமும் உள்ளது. தன் மீது அன்பையும், அக்கறையையும்,ஆதரவையும் கொடுத்தவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், விரைந்து குணம் பெற வேண்டி இறைவனை பிரார்த்திக்குமாறு வேண்டியுள்ளார்
முன்னதாக தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு விடை கொடுத்து பிரிவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், சாய்ரா பானுவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தனர். அப்போது சாய்ரா பானு ஆடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் உடல்நலன் சார்ந்து மும்பையில் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
Post a Comment