பெற்றோருக்கு நிதி அனுப்புவது குற்றமா?




பெற்றோருக்கு நிதி அனுப்புவது குற்றமா?  ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் வாதம்.. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் பிரித்தானிய பிரஜை சங்கர் விடுதலை.


ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தை அடுத்து கடந்த 30 ஆம் திகதி பயங்கர வாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை விடுதலை


உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து பிரித்தானிய பிர ஜையான சங்கர் LTTE மீள் உருவாக்கத்திற்காக நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.


பிரித்தானிய பிரஜையான விஜயசுந்தரம் சங்கர் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இலங்கை வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்ற புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.


 இந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் மன்றில் எடுத்தும் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் சங்கர் சார்பில் ஆஜராகிய சரார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் இந்த சந்தேக நபரை கைது செய்தமை சட்டரீதியற்ற கைது என்றும் 2009 ஆண்டு யுத்தம் மௌனிக்கபட்ட பின்னர் பல நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கைது செய்யப்பட்ட பொழுது இந்த சந்தேக நபரும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமந்த முடியாத நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.





 அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு பயணமாகிய பின்னர் பிரித்தானிய பிரஜாவுரிமையும் பெற்றுக்கொண்டார்.


பொலீசார் 2012 இல் சந்தேக நபர் சங்கருக்கு எதிராக நிதி சேகரித்ததாக நீதி மன்றில் அறிக்கையை தாக்கல் செய்து விசாரணை செய்த போதிலும் 2024 ஆம் ஆண்டு கைது செயப்படும்வரை இவருக்கெதிராக பொலிஸ் விசாரணையில் நீதிமன்றில் எவ்வித சான்றுகளும் முன்வைக்கப்படவில்லை என்பதோடு சந்தேக நபர் எந்த குற்றதை புரிந்தார் என்பதை நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கைகளில் பொலிசார் தெளிவாக குறிப்பிடப்படவில்லை 


2010 ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு கைது செய்யப்படும் வரை சந்தேக நபர் இலங்கைக்கு எந்த விஜயமும் மேட்கொண்டிருக்கவில்லை என்பதை நீதி மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன்.


 மேலும் தனது வாதத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இவ்வாறான சட்டரீதியற்ற கைதுகளினால் புலப்பெயர் தமிழர்களின் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைவதுடன் சுற்றுலாத்துறையிலும் பாரிய பாதிப்புகள் ஏட்படுவதுடன் இது இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சியையும் ஏட்படுத்தும், என்பதனையும் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்


கடந்த 06 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பிரித்தானிய பிரஜையினால் நிதி அனுப்பட்ட தாக கைது செய்யப்பட்டார் ஆனால் விசாரணையில் தனது பெற்றோருக்கே நிதி அனுப்பியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது பெற்றோருக்கு நிதி அனுப்புவது குற்றமா? 


என்ற வாதத்தையும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வ.தவராசா நீதிமன்றில் முன்வைத்ததை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபரை விடுதலை செய்தார்.


இந்த வழக்கில் சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜா அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் சட்டத்தரணி மொஹமட் மிஸ்பா சட்டத்தரணி ஓஷதி கனீஷா ஹப்புஆராச்சி ஆஜராகியிருந்தனர்




பெண்களின் மனம் கவர் ஆடையகம்


VASTHRALAYA SAREES (PVT) LTD


55F-1/3, Manning Place

Wellawatte colombo 06 Sri Lanka

T:P 0094776176709

#VASTHRALAYA SAREES

பெண்களின் மனம் கவர் ஆடையகம்  விளம்பரம் 



AKSWISSTAMIL வானொலி. 24 மணிநேர சேவையோடு உங்கள் கைபேசி ஆப்ஸ் வழியே இனைந்து இருக்க


Download


AKSWISSTAMILFM APPS android  


https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss  👈👈


AKSWISSTAMILFM  APPS IPHONE


https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone 👈

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial