ஐஸ் போதைப்பொருட்களை பொதி செய்து விநியோகித்த சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1 கிராம் 790 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் மற்றும் சான்றுப்பொருட்களுடன் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார்.
அத்துடன், குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment