சற்றுமுன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பாரிய பஸ் விபத்து. மூவர் உயிரிழப்பு
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் ஹட்டனிலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் பயணித்த நிலையில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.
பஸ் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின் போது பஸ்ஸில் 20 முதல் 25 பேர் வரை பயணித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் காயமடைந்த நிலையில் டிக்கோயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment