சட்டை இல்லை என்றால் வாங்கி தருகிறோம்.. உதயநிதி டி சர்ட் அணிந்தால் வழக்கு போடுவோம்.. ஜெயக்குமார்
சென்னை: உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் போட்டு செல்வது உதயநிதி ஸ்டாலின் தான். டி சர்ட் போடுவதை நான் குறை சொல்லவில்லை. கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள். உதயநிதியிடம் சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தமிழக துணை முதல்வராக இருக்கக் கூடிய உதயநிதி ஸ்டாலின், பொது நிகழ்ச்சிகளில் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட டி சர்ட் அணிந்து வருவதாகவும், உதயநிதி தனது உடை விஷயத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் டி சர்ட் போட்டு அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். அவரிடம் சட்டை இல்லையா?... சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம். டி சர்ட் போட்டுக்கொண்டு அதில் அவரது கட்சியின் சின்னத்தை பொறித்துக்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இது ஏற்புடையது இல்லை. கட்சி நிகழ்ச்சிக்கு எப்படி வேண்டுமானாலும் போங்கள்.. அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அரசு நிகழ்ச்சி என்றால் அதற்கு என்று சில விதிகள் உள்ளன. 2019 ஆம் ஆண்டில் போடப்பட்ட உத்தரவில், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கண்ணியமான உடையை அணிய வேண்டும். ஆண்களாக இருந்தால் சட்டை, ஃபார்மல் பேண்ட், வேட்டி என தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Post a Comment