லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில், டி.ஜே.ஞானவேல்ராஜா இயக்கத்தில், சூப்பர்ஸ்டான் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சுவாரியர் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி, ரகிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
ஜெய்பீம் திரைப்படப் புகழ் டி.ஜே.ஞானவேல்ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி வேடத்தில் நடித்துள்ளதோடு, அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோஹினி, கிஷோர் உள்ளிட்டவர்களும் முக்கியமான வேடங்களை ஏற்று நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு, எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளதோடு, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளமையால், திரையரங்குகளில் வெளியாகும் முன்னரே வேட்டையன் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்பட்டது.
மேலும், ஜெய்பீம் எனும் சிறந்ததொரு திரைப்படத்தை தமிழ் சினிமாவுக்கு மட்டுமன்றி, இந்திய சினிமாவுக்கும் வழங்கி, அதனை ஒஸ்கார் விருது வரை அழைத்துச் சென்ற இயக்குநரான டி.ஜே.ஞானவேல்ராஜா இதனை இயக்கியமையாலும் இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அனைவரிடத்திலும் அதிகரித்திருந்தது.
இந்த நிலையிலேயே வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இன்று காலைக் காட்சிகளிருந்தே மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வருகைத் தருவதோடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதையும் காணக்கூடியவாறு உள்ளது.
மேலும், வேட்டையன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ரகிசர்களுக்காக ஆதவன் தொலைக்காட்சி இன்று ஏற்பாடு செய்துள்ளமையும் விசேட அம்சமாகும்.
அந்தவகையில், இன்று இரவு 7 மணிக்கு வெள்ளவத்தை, சவோய் பிரிமியர் திரையரங்கில் இந்தத் சிறப்புக் காட்சி இடம்பெறவுள்ளதோடு, இதில் கலந்து கொண்டு வேட்டையன் திரைப்படத்தை ஆதவன் முழுமத்தோடு இணைந்து கண்டு மகிழுமாறும் ரகிகர்களை நாம் கேட்டுக் கொள்கிறோம்.
பெண்களின் மனம் கவர் ஆடையகம்
VASTHRALAYA SAREES (PVT) LTD
55F-1/3, Manning Place
Wellawatte colombo 06 Sri Lanka
T:P 0094776176709
#VASTHRALAYA SAREES
பெண்களின் மனம் கவர் ஆடையகம் விளம்பரம்
AKSWISSTAMIL வானொலி. 24 மணிநேர சேவையோடு உங்கள் கைபேசி ஆப்ஸ் வழியே இனைந்து இருக்க
Download
AKSWISSTAMILFM APPS android
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈
AKSWISSTAMILFM APPS IPHONE
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone 👈
Post a Comment