களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ் நிலப் பகுதிகள் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது பள்ளத்தாக்கின் மேல் மற்றும் நடுத்தர பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சியினாலாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சிதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்பிலான எச்சரிக்கை அமுலில் உள்ளது.
இப்பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும், அவ்வழியாகச் செல்லும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
Post a Comment