பிரிட்டனில் பிரேக் அப் ஆகியும் முன்னாள் காதலனை விடாமல் தொல்லை செய்துவந்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நர்ஸ் வேலை பார்க்கும் சோபி கால்வில் [Sophie Colwill] என்ற 30 வயது பெண்ணை டேவிட் பாக்லீரோ [David Pagliero] என்ற 54 வயது பல் மருத்துவர் தனது மனைவி இறப்புக்கு பின்னர் காதலித்து வந்துள்ளார்.
ஆனால் சமீபத்தில் இருவருக்கும் இடையில் காதல் முறிவு ஏற்பட்டதால் சோபி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
காதலனை இழக்க விரும்பாத சோபி, பிரேக் அப் ஆன அடுத்த நாளே டேவிட்டின் செல் போனுக்கு 1,000 முறை போன் செய்துள்ளார். ஆனால் டேவிட் போனை எடுக்காமல் தவிர்த்துள்ளார்.
மேலும் டேவிட் எங்கெல்லாம் செல்கிறார் என்பதை கண்காணிக்க அவரது காரில் டிராக்கிங் டிவிஸ் பொறுத்தியுள்ளார் சோபி.
இது பத்தாது என்று டேவிட்டின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே அவர் வரும்வரை வம்படியாக பெட்ரூமில் வெயிட் செய்துள்ளார். டேவிட் வந்ததும் அவரின் போனை பிடுங்கும் முயற்சியில் அவருடன் சண்டை போட்டுவிட்டு ஜன்னல் வழியே குதித்து தப்பியுள்ளார்.
Post a Comment