amazon prime -இல் வெளியாகும் காதலிசம்

காதலிசத்தை முழுக்க சிங்கப்பூரை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். நாயகன் தவிர்த்து அனைவரும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். போட்டோகிராஃபரான நாயகனும், ஐடி துறையில் வேலை பார்க்கும் நாயகியும் பார்ட்டி ஒன்றில் பரஸ்பரம் பார்த்து, காதலாகி கடைசியில் சேர்ந்து வாழத் தீர்மானிக்கிறார்கள்

டுலெட்டில் தாடி, மீசையுடன் இறுக்கமான உடல்மொழியுடன் நடித்த சந்தோஷ் நம்பிராஜன் பத்து வயது குறைத்து சாக்லெட் பாய் லுக்கில் கவர்கிறார். காதலியின் மூடுஸ்விங்குக்கு அவர் காட்டுகிற முகபாவங்கள் அவர் மீது அதிக நம்பிக்கைக் கொள்ள வைக்கிறது. ஹன்சிகாவின் கஸின் தோற்றத்தில் இருக்கிறார் நாயகி. சும்மா வந்து போனாலே பிடித்துவிடும், இதில் நடிக்க வேறு செய்கிறார். அவரது தோழியாக வருகிறவரும் மீட்டருக்கு அடங்கிய நடிப்பை தந்திருக்கிறார்.

 லிவிங் டுகெதர் குறித்து படமெடுப்பதில் உள்ள சிக்கல் வேறு மாதிரியானது. இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டார்கள் என்று கதையை ஆரம்பித்தால், அவர்கள் கடைசியில் பிரிந்தார்கள் என்றோ, பிரிந்து மறுபடி கூடினார்கள் என்றோ முடித்துவிடலாம். இரண்டு பேர் கல்யாணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்தார்கள் என்று கதையை ஆரம்பித்தால் எப்படி முடிப்பது? இணைந்தே வாழ்ந்தார்கள் என்றால், இதென்ன போங்கு கதை என்பார்கள்.

சிங்கப்பூரில் குழந்தையை வளர்க்க விருப்பமில்லை என்றால்,  தத்தெடுப்பவர்களுக்கு குழந்தையை தந்துவிடுவார்கள். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதே டோக்கன் கொடுத்து தத்துப் பெறுகிறவர்களை தீர்மானித்துவிடுவார்கள். இந்த நடைமுறையை க்ளைமாக்ஸ் டுவிஸ்டாக்கியிருப்பது புத்திசாலித்தனம். விரைவில் noizbloc மூலமாக  amazon prime --இல்வெளியாக இருக்கிறது


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial