தமிழ் சினிமாவில் முன்னனி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது.
இப்படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் இருந்து பாரிஸ் நகருக்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் வீடியோவை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் 'அக்னி நட்சத்திரம்' படத்தில் வரும் 'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. இவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Post a Comment