யாகி சூறாவளி : வியட்நாமில் 64 பேர் பலி

 



பிலிப்பைன்ஸில் உருவான யாகி சூறாவளி சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது.   

வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி சூறாவளி வீசியது. மணிக்கு 149 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி சூறாவளி கரையை கடந்தது. 

வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும் இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது.

இந்நிலையில் அங்குள்ள மலைபாங்கான காவ் பாங் மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனிடையே அங்கே ஆற்றின் குறுங்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் ஒன்று இரண்டு தூண்டுகளாக உடைந்து ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியது.

அப்போது அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த பஸ்சில் பயணித்த 20 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்புத்துறையினர் பஸ் பயணிகளின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial