புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் அறிவிப்பு..

 



நிறைவடைந்த 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததுள்ளதாக தகவல் வௌியானதை அடுத்து பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை நடத்தியது.

அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையுடன் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial