ஷங்கரின் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் நேற்றைய தினம் வெளியான இந்தியன் 2 கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. ஷங்கர், கமல், ஏஆர் ரகுமான் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது.
அதேபோல் இந்தியன் 2 படமும் இருக்கும் என்று நினைத்த நிலையில் ஷங்கர் அதை பொய்யாக்கி விட்டார். இதற்கு காரணம் சுஜாதாவின் திரை கதை மற்றும் ஏஆர் ரகுமானின் இசை இல்லாதது என பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
அதோடு இந்தியன் 3 படமும் அடுத்ததாக வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியன் போலவே ஷங்கர் தன்னுடைய அடுத்த படத்தையும் மூன்று பாகங்களாக எடுக்க இருக்கிறார். சு வெங்கடேசனின் வேள்பாரி கதையை பலரும் படிக்க சொல்லி ஷங்கரிடம் கூறினார்களாம்.
இந்தியன் 3 போல் உருவாகும் வேள்பாரி
நேரம் கிடைக்காததால் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த ஷங்கர் கொரோனா காலகட்டத்தில் வேள்பாரி கதையைப் படித்து வியந்துள்ளார். உடனடியாகவே இந்த படத்தின் ரைட்ஸை வாங்கிவிட்டாராம். அடுத்ததாக இந்தப் படத்தை எடுக்கும் திட்டத்தில் ஷங்கர் இறங்க இருக்கிறார்.
ஏற்கனவே வேள்பாரி கதையில் சூர்யா, ரன்வீர் சிங் போன்ற நடிகர்கள் ஹீரோவாக நடிப்பதாக பெயர்கள் வெளியானது. ஆனால் ஷங்கர் இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இன்னும் வேள்பாரி கதைக்கான நடிகர் மற்றும் நடிகைகளை தேர்வு செய்யவில்லை என்று கூறியிருந்தார்.
Post a Comment