காலி வீதி உட்பட கொழும்பின் பல வீதிகளில் நாளை (07) முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போரா சமூகத்தின் வருடாந்த ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு இவ்வாறு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரா ஆன்மீக மாநாடு நாளை முதல்16 வரை பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல், இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 15,000 பேர் கலந்து கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
Post a Comment