தமிழகத்தின் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு வந்துள்ளது
மேலும் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீன்பிடி விசைப் படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகின் பின் பகுதி சேதம் அடைந்து படகில் இருந்த மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கரை சேர்ந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடல் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக வீசி வந்த சூறைக்காற்று காரணமாக மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து நேற்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று 430 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
Post a Comment