முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, அவரது சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜூலை 11 ஆம் திகதி குறித்த பிணை விண்ணப்பத்திற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த ஆட்சேபனைகளை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தமக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செல்லுபடியாக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.
Post a Comment