மும்பையில் மிகப்பெரும் தொழிலதிபராக இருக்கும் நிக்கோலாய் என்பவரை தான் இவர் தற்போது கரம்பிடித்துள்ளார்.
மிகப்பெரும் பணக்காரர்களுள் ஒருவரான இவர் சொந்தமாக ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறார்.
இதன் மூலம் அவருக்கு கிட்டத்தட்ட 900 கோடிக்கு சொத்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
திருமணம் ஆகி விவாகரத்தான நிக்கோலாய்க்கு 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். அதேபோல் பார்ப்பதற்கு பாடி பில்டர் போன்று முரட்டு பீசாகவும் இருப்பார்.
இதனாலேயே இவர்களுடைய திருமணத்தைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதில் முக்கியமானது வரலட்சுமி புளியங்கொம்பாக பிடித்து விட்டார் என்ற பேச்சு தான் அதிகமாக இருக்கிறது.
அதன்படி இந்த திருமணத்திற்கான மொத்த செலவையும் நிக்கோலாய் தான் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். அதேபோல் இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதற்காக அவர் பல கோடிகளை செலவு செய்திருக்கிறார்.
அதேபோல் சென்னை தாஜ் ஹோட்டலில் மீண்டும் திருமணத்தை நடத்தி இருக்கின்றனர். மேலும் லீலா பேலஸ் ஹோட்டலில் இவர்களின் ரிசப்ஷன் ஆடம்பரமாக நடைபெற்றது. இதற்கு பல பிரபலங்கள் வந்து வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆச்சரியப்பட கூடிய விஷயம் என்னவென்றால் நிக்கோலாய் தன் மனைவிக்கு தங்க செருப்பு, வைர சேலை என பரிசளித்திருக்கிறார். அது மட்டும் இன்றி 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் அவர் பெயரில் மாற்றி கொடுத்திருக்கிறாராம்.
இதுதான் இப்போது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அம்பானியே தன் மகனுக்கு தங்க ஆடை தான் அணிவித்தார். ஆனால் இவரோ வைரத்தில் சேலை பரிசளித்திருக்கிறார்.
எது எப்படியோ வரலட்சுமி விஷாலிடமிருந்து எஸ்கேப் ஆகி நல்ல வாழ்க்கையை தேடிக்கொண்டார் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். அதேபோல் சமீப காலமாக விவாகரத்து ஒரு ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. அப்படி இல்லாமல் இவர்கள் சிறந்த தம்பதிகளாக இருக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
Post a Comment