நாட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் அட்டை முறையிலான சாரதி அனுமதிப் பத்திர முறைமையை, இலத்திரனியல் சாரதி அனுமதிப் பத்திரமாக விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப் பத்திர அச்சிடும் பிரிவின் பிரதி ஆணையாளர் சுரங்கி பெரேரா தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் நாட்டின் எப்பகுதியிலிருந்தும் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுபித்தல், காணாமல் போன சாரதி அனுமதிப் பத்திரத்தை மீளப் பெற்றுக்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை எதிர்காலத்தில் இலத்திரனியல் முறையில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
Post a Comment