ஒரு தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அகதிகளாக வெள்ளிக்கிழமை அன்று அதாவது நேற்றய தினம் காலை தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோக வள்ளி வயதுடைய அவரது பிள்ளைகளான அனுஜா (வயது 08), மிஷால் (வயது 05) ஆகியோர் தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்தனர்.
தகவல் அறிந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்து விசாரணைக்காக 3 பேரையும் மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாணையில் யோக வள்ளி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகதி முகாமில் பிறந்தவர் என்றும்,15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை திரும்பியவருக்கு அங்கே திருமணம் முடிந்து கணவருடன் பிரிந்து வாழ்கிறார் என்றும் தெரியந்துள்ளது.
2 குழந்தைகளுடன் இலங்கையில் வாழ முடியாத சூழலில் வெம்பக்கோட்டை முகாமில் அவரது தாயாருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் தமிழகம் வந்ததாக தெரிய வந்துள்ளது.
Post a Comment