பண்டாரவளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த ஹோட்டல் சுவரில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
விபத்தில் காயமடைந்தவர்கள் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 4 பெண்களும் 5 ஆண்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த பஸ்சில் இயந்திரக்கோளாறு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
Post a Comment