நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகை த்ரிஷா சேர்கிறார் என ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
அரசியலுக்கு வர இது தான் சரியான நேரம் என முடிவு செய்து தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை துவங்கினார் விஜய்.
2026ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தல் தான் எங்கள் இலக்கு என கூறிவிட்டார்.
இந்நிலையில் 2026ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றி பெற்று விஜய் தான் முதல்வர் ஆவார் என அவரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா. எடுத்த எடுப்பில் அத்தனை தொகுதிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடைக்க வாய்ப்பு இல்லை.
அதனால் 2026ம் ஆண்டு விஜய்யால் முதல்வராக முடியாது என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment