நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன் இதன்போது மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்டிருந்த 04 படககளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம், தனுஸ்கோடி மற்றும் பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைக்காலமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment