வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் படத்தில் தன்னுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்து விட்டார். இதற்கு அடுத்ததாக அவருடைய தளபதி 69 படத்தை தான் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதற்கு பல இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்து இறுதியாக ஹச் வினோத் தான் இயக்கப் போகிறார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது பார்த்தால் இப்படம் கைவிடப்படுவதாகவும் கோட் தான் கடைசி படமாக இருக்கும் என்றும் செய்திகள் பரவுகிறது.
ஏனென்றால் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் விரைவில் மிகப்பெரும் மாநாடு ஒன்றை நடத்தி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அது மட்டுமின்றி ஏற்கனவே மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது என அவர் மக்கள் பணியை ஆரம்பித்து விட்டார்.
Post a Comment