காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 47 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 57 பேர் வரை காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்தும் காசாவின் பல நகரங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் காசாவின் பல பகுதிகளில் உள்ள மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை 37,765 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 86,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காசாவில் 21 ஆயிரம் சிறுவர்கள் காணாமல் போய் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மாயமானவர்களில் பலர் வெடிகுண்டால் தகர்க்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி இறந்திருப்பதாகவும், மேலும் பல சிறுவர்களை இஸ்ரேல் இராணுவம் கொன்று புதைத்ததாகவும் பாலஸ்தீனிய தரப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்நிலையில், காணாமல் போன சிறுவர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்களை பிரிந்து தவித்து வருவதால் அவர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர் அலெஸ்சான்ரா சையே வலியுறுத்தியுள்மையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment