நயன்தாரா 12 கோடி சம்பளம் வாங்கினாலும் நடிப்பதற்கு 100 கண்டிஷன்கள் போட்டு வருகிறார். நான் லேடி சூப்பர் ஸ்டார் இப்படித்தான் இருப்பேன் என தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் பல செக் வைக்கிறாராம். படத்திற்கான கால் சீட்டும் இவர் இஷ்டம் தான்.
சென்னையில் மட்டும் தான் சூட்டிங் வருவேன் அதுவும் 10 மணிக்கு வந்துவிட்டு 4:00 மணிக்கெல்லாம் சென்று விடுவேன். என்னால் 10 மீட்டர் தொலைவிற்கு உள்ளே தான் ஷூட்டிங் வர முடியும் அதனால் இந்த இடத்தில் தான் சூட்டிங் நடைபெற வேண்டும் என்றெல்லாம் பல கண்டிஷன்களை போட்டு திணறடிக்கிறாராம்.
கெத்து குறையாத நயந்தாரா பெரிய டைரக்டராகிய கௌதம் வாசுதேவ் மேனனிடமும் இதையே வலியுறுத்திருக்கிறார். இப்பொழுது அவர் எடுக்கவிருக்கும் புது படத்தில் ஒப்பந்தமான நயன்தாராவை நீக்கிவிட்டார். அதற்கு பதிலாக அடுத்த இடத்தில் இருக்கும் திரிஷாவிடம் பேசி வருகிறார்.
ஏற்கனவே துருவ நட்சத்திரம் பஞ்சாயத்தால் கௌதமேனன் நிம்மதி இல்லாமல் சுற்றி வருகிறார். இப்பொழுது நயன்தாரா மூலமாக மேற்கொண்டும் அவருக்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது.
அதனால் கடும் கோபத்தில் திரிஷா பக்கம் வந்து விட்டார். ஆனால் திரிஷாவும், விடாமுயற்சி தக் லைப் படத்தில் நடித்து வருவதால் நோ சொல்லிவிட்டாராம்.
தமிழ் படங்களை வேண்டாம் என மலையாளத்தில் ஒரு படத்தை இயக்குவதற்காக மம்மூட்டி மற்றும் நயன்தாராவை அணுகியுள்ளார்.
அந்த படத்திற்கு தான் நயன்தாரா இவ்வளவு பிரச்சனை செய்துள்ளார். இதனால் அப்செட் ஆன கௌதம் மேனன் நயன்தாராவும் வேண்டாம் திரிஷாவும் வேண்டாம் என சமந்தாவை ஹீரோயினாக புக் செய்து விட்டாராம்.
Post a Comment