பல வர்த்தகர்களுக்குப் போலி காசோலைகளை வழங்கியதாகக் கூறப்படும் பெண் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல், சந்தேக நபருக்குத் தப்பிச் செல்ல உதவி செய்தல், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடைகளை சேதப்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபரின் தாயார் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment