சீரற்ற வானிலை - பலி எண்ணிக்கை 26ஆக அதிகரிப்பு!

 







நாட்டில் நிலவிவரும்  மழையுடனான வானிலை காரணமாக  இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று  உரையாற்றிய போதே  பிரமித்த பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

 சீரற்ற காலநிலையால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு  41 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

23 மாவட்டங்களில் 262 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 33 ஆயிரத்து 422 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்  என பிரமித்த பண்டார தெரிவித்துள்ளார்.

அந்த பிரதேசங்களில் அரசாங்கத்தினால் நடத்தப்படும் 116 பாதுகாப்பு நிலையங்களில் 2,368 குடும்பங்களைச் சேர்ந்த 9,248 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial