புவக்பிட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி 3 பேர் பலி!!

 






36 மற்றும் 07 வயதுடைய இரண்டு பெண்களும் 78 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, தெய்யந்தர, பல்லேவெல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்து எல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சீரற்ற காலநிலை

தெனகம பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

சடலங்கள் எல்லேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை டீயெந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 3834 குடும்பங்களை சேர்ந்த 13717 பேர் பாதிக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial