சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா... 17 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!

சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா... 17 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!


அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இறுதிப்போட்டி பார்படாஸின் பிரிட்ஜ்டவுன் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். பின்னர், கேசவ் மகாராஜ் வீசிய 2வது ஓவரின் 4வது பந்தில் ரோகித் ஷர்மா 9 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதே ஓவரின் கடைசி ஓவரில் ரிஷப் பந்த் டக் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் 4வது ஓவரில் ரபாடா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.அதனை தொடர்ந்து முன்கூட்டியே களமிறங்கிய ஆல்ரவுண்டர் அக்சர் படேல், விராட் கோலியுடன் கைகோத்து நிதானமாக ஆடினார். விராட் கோலி ஒருபக்கம் நிதானம் காட்ட மறுபக்கம் அக்சர் படேல் அதிரடியாக ஆடி இந்திய அணியை இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். இந்த நிலையில் 13.3 ஓவரில் 31 பந்துகளை சந்தித்து 47 ரன்கள் எடுத்திருந்த அக்சர் படேல் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபேவும் கோலியுடன் இணைந்து ஆடினார். விராட் கோலி 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்தார் கோலி. அவர் 59 ரன்களில் 76 ரன்கள் எடுத்திருந்தபோது ஜான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் சிவம் துபே 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து தென்னாப்பிரிக்க அணி 177 ரன்கள் இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்தது.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹென்ரிக்சை 4 ரன்களிலேயே போல்டாக்கி பும்ரா அதிர்ச்சி கொடுத்தார். இதனை அடுத்து களம் இறங்கிய மார்க்ரமும் அர்ஷ்தீப் சிங் பந்தில் காச் ஆகி அவுட் ஆனார். இதனை அடுத்து ஸ்டப்ஸ் 31 ரன்னிலும், டி காக் 39 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். கிலாசன் மட்டும் நிலைத்து ஆடி 52 ரன்கள் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். பாண்டியா பந்தில் கிலாசன் காச் ஆனது திருப்புமுனையாக அமைந்தது.பவுலிங்கை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங்கும், பும்ராவும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்ழ்தினர்.

இறுதியாக 8 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 169 ரன்களை மட்டுமே சேர்த்தது. இறுதியாக 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை ருசித்து டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial