இன்றும் 35 ரயில் பயணங்கள் ரத்து

 





ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் (09) தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று  காலை 35 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதவி உயர்வு வழங்குவதில் தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு கடந்த 06ம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் இந்த தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என்றால் தொழிற்சங்க நடவடிக்கை கடுமையாக்கப்படும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacketGirl in a jacket

5

5

HTML tutorial