நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் வைத்து 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 30 பேரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.
கொச்சிக்கடை பல்லம்சேன மற்றும் பலகதுரே ஆகிய பிரதேசங்களில் உள்ள இரண்டு விருந்தகங்களில் தங்கியிருந்து இந்த நிதி மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது நிதி மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட 10 கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Post a Comment