மாத்தளை - நாவுல - அரங்கல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
65 வயதுடைய ஜி.எம்.விமலரத்ன மற்றும் 76 வயதுடைய ஹீனா கமகெதர சோமாவதி ஆகிய இருவருமே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியொன்றும் தம்புள்ளையிலிருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் பின்னர் முச்சக்கரவண்டி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் காரின் சாரதியை நாவுல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Post a Comment