கொழும்பில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலாமாக மீட்கப்பட்டவர் 39 வயதுடைய மொரட்டுவை, ராவத்தவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment