கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சடலம் கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற இளைஞனுடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலத்தில் அடிகாயங்களும் காணப்படுவதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மரணம் தொடர்பாக நீதவான் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில் தர்மபுரம் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment