ரயில் ஒன்று தடம் புரண்டதால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை 06.30 மணியளவில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அஞ்சல் ரயில் சேவை, கலபடை மற்றும் இகுருஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 1.15 மணியளவில் ரயில் தடம் புரண்டுள்ள நிலையில், இதனால் அந்த மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் இரண்டு குறுகிய தூர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது ரயிலினை தடமேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment