யாழ் (Jaffna) மாநகரசபைக்குட்பட்ட வண்ணார்பண்ணை, நல்லூர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஓர் உணவு தொழிற்சாலை மற்றும் மூன்று உணவகங்களை சீல் வைத்து மூடுமாறு நீதவான் A. A. ஆனந்தராஜா கட்டளை பிறப்பித்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த 19ஆம் திகதி உணவு தொழிற்சாலை மற்றும் உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஓர் உணவு தொழிற்சாலை மற்றும் மூன்று உணவகங்கள் இனங்காணப்பட்டன.
இந்நிலையில், குறித்த உணவு கையாளும் நிலையங்களிற்கு எதிராக மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
Post a Comment