இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்ற நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியாக குறைவடைந்துள்ளது.
இதனடிப்படையில், இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 697,294 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,650 ரூபாவாகவும்,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 189,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,850 ரூபாவாகவும்,
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 174,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
Post a Comment