பின்லாந்தில் வசித்து வந்த Hiruni’s Northern Life என்ற பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த ஹிருணி தனது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டில் வாழ்ந்து வரும் அவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விபரங்களை பின்லாந்து ஊடகங்கள் வெளியிடாததுடன், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்திரம் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்து ஊடகங்கள் ஹிருணியின் குடும்பத்தை தெற்காசிய குடும்பமாக அறிமுகப்படுத்தியுள்ளன.
அவர்கள் நீண்ட காலமாக அங்கு வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment