நடிகை அமலா பாலுக்கு கடந்த பதினோராம் தேதி குழந்தை பிறந்து இருக்கிறது. இதை ரொம்ப சந்தோசமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
அறிமுகமே சர்ச்சையான படம் என்பதாலேயே என்னவோ அமலா பாலை சுற்றி எப்போதுமே சர்ச்சை இருக்கிறது.
தலைவா, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களின் மூலம் வெற்றி ஹீரோயினாக வளர்ந்து வந்து கொண்டிருந்த நேரத்திலேயே இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
போன வேகத்திலேயே விவாகரத்து ஆகி மீண்டும் சினிமாவை நம்பி வந்தார்
ஆனால் அமலா பாலுக்கு சினிமா கை கொடுக்கவில்லை. ஆடை படத்திற்கு பிறகு சினிமாவில் அதிகம் தலை காட்டாத அமலா, ஜெகத் தேசாய் என்பவரை கடந்த நவம்பர் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார்.
கல்யாணம் முடிந்த கையோடு கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்தார்.
Post a Comment