வெள்ள நீர் வடிந்து வருவதால், ஈக்களின் பெருக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் காணப்படும் சாதகமான சூழ்நிலை ஈ முட்டைகள் முதிர்ச்சியடைவதை துரிதப்படுத்துவதுடன், வெள்ள நீர் குறையும்போது ஈக்கள் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
புதிதாக குஞ்சு பொரித்த இந்த ஈக்கள், உணவு ஆதாரங்களைத் தேடி, அடிக்கடி மலம், குப்பைகள் மற்றும் அசுத்தமான பரப்புகளை நோக்கி ஈர்த்து, சுகாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துகின்றன என வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஈக்களின் எழுச்சியின் விளைவுகள் பயங்கரமானவை என்பதுடன், வயிற்றுப்போக்கு நோய்கள் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு காரணமான பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உள்ளிட்ட நோய்க்கிருமிகளை ஈக்கள் காவி கொண்டு வருகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment