உலகின் மிகப் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான என்டனோவ் 124 (ANTONOV-124) நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதிப்பணிகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கு எம்ஐ 17 உலங்கு வானூர்தி ஒன்றை கொண்டு செல்வதற்காகவே இந்த விமானம் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2014 முதல், மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளில், படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணிகளுக்காக ஏற்கனவே மூன்று எம்ஐ-17 உலங்கு வானூர்திகளை அங்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment