ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி புதிய மாவட்ட செயலக கட்டிட தொகுதியை திறந்துவைக்கவுள்ளதுடன் இரு தினங்கள் மட்டக்களப்பில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் வருகை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
Post a Comment