அரசாங்கம் நடத்தும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் கடந்தகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தகாத செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமெரிக்கா (US) குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில், கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டுக்கான கடத்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், சிறுவர்களை தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அரச சிறுவர் பராமரிப்பு இல்ல பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளில் எந்த முடிவுகளும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், 2021ஆம் ஆண்டில், 15 வயது சிறுமியை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்படை அதிகாரி ஆகியோருக்கு எதிரான வழக்கில், சட்டமா அதிபர், போதிய ஆதாரங்கள் இல்லை என கூறிவிட்டார் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment