கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி எஹலியகொடவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அங்கு 424.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அதற்கு அடுத்தப்படியாக ஹல்வத்துறை தோட்டத்தில் 348.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன் அக்குரஸ்ஸவில் 283.5 மில்லி மீற்றர் மழையும், சாலவ பகுதியில் 280.5 மில்லி மீற்றர் மழையும், பாலிந்தநுவரவில் 276 மில்லி மீற்றர் மழையும், தெரணகல பகுதியில் 267 மில்லி மீற்றர் மழையும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் இன்றைய தினமும் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Post a Comment