ஜூன் 22 விஜய் பிறந்தநாள். அரசியல் தலைவராக தளபதி கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. 50ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விஜய் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பல திட்டம் தீட்டி வருகிறார்.
இந்த பிறந்தநாள் அன்று முக்கியமான அரசியல் தலைவர்கள் சிலைக்கு மாலை இடும்படி விஜய்யின் அரசியல் ஆலோசகர்கள் அறிவுரை கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கவிருக்கிறார் விஜய்.
மேலும் அவர் பிறந்த நாள் அன்று கோட் படத்தின் இரண்டாவது சிங்கள் வெளிவர இருக்கிறது. படத்தில் ஏற்கனவே விஜய் “விசில் போடு” பாடலை பாடியுள்ளார். இது தவிர இன்னொரு பாடலையும் பாடியதாக கூறப்படுகிறது.
ஜூன் 22 விஜய் பாடிய மற்றொரு பாடல் வெளிவர இருக்கிறது. இந்த பாட்டு வரிகள் விஜய்க்கு பிடித்திருந்ததால், வெங்கட் பிரபுவிடம் கேட்டு வாங்கி பாடியதாக பட குழுவினர் கூறுகின்றனர். இந்த வருடம் பிறந்த நாளை வெங்கட் பிரபு மற்றும் கோட் குழுவினருடன் கொண்டாடுகிறார் விஜய்.
Post a Comment