'
இலங்கையின் தற்போதைய நிலைமையில் நாட்டை ஆளக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே. அவர் ஆட்சியில் தொடர வேண்டும் - என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
"அரகலய போராட்டத்தின் விளைவாகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
அவர் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறிச் செல்லும்.
அவர் இல்லையேல் மீண்டும் பொருளாதாரம் படுவீழ்ச்சி அடையும்.
மீண்டும் 'அரகலய' போராட்டம் வெடிக்கும்.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரை சகல தரப்பினரும் இணைந்து வெற்றியடையச் செய்ய வேண்டும்.
சர்வதேசமும் எமது நாட்டுக்கு உதவிகளை வழங்கும்.
Post a Comment