விகே பாண்டியனை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு தளபதி விஜய், தமிழக வெற்றி கழகத்தில் எப்போது வேண்டுமானாலும் இணையலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.
ஒரு தமிழனாக இந்தியளவில் தோற்கடிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு அதிகம் என்று தான் கூற வேண்டும். இந்த அரசியல் வியூகத்தை விஜய் கையில் எடுத்துக்கொண்டு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
இது 2026-ல் அரசியல் களத்தை ஈசியாக சந்தித்து வெற்றி பெற பக்கபலமாக இருக்கும் என்று நம்புகிறார் விஜய்.
இந்தியளவில் கிடைக்காத பெயரையும், புகழையும் தங்களுக்கு எந்தவித களங்கமும் இல்லாமல் திரும்பப் பெற்றுத் தருகிறேன் என்று உறுதி செய்துள்ளாராம் விஜய்.
இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை விஜய் விரைவில் அறிக்கை மூலமாக வெளியிட்டால் கட்சியின் தொண்டர்களுக்கு முழு மகிழ்ச்சி கிடைக்கும்.
வரும் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் தமிழக வெற்றி கழகம் சீமானுடன் இணையவும் அதிக வாய்ப்புகள் உள்ளதால் 2026 தேர்தலில் இளைஞர்களின் ஓட்டுகளை வைத்து பெரும் மாற்றம் உண்டாகும் என்பது உறுதியாகி வருகிறது.
Post a Comment