மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் சிக்கி மேலும் 9 பேர் பலி

 






இரத்தினபுரி அயகம பகுதியில் தும்பர பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


அதேபோன்று, இரத்தினபுரி கிரியெல்ல பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, அவிசாவளை - புவக்பிட்டிய எலிஸ்டன் தோட்டப்பகுதியில் வௌ்ளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த

மூவர் உயிரிழந்துள்ளனர்.


78 வயதான தந்தை, 36 வயதான மகள் மற்றும் 7 வயதான பேத்தி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


வீடு வௌ்ளத்தில் மூழ்கிய காரணத்தினாலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.


இதனிடையே, அவிசாவளை ஹேவாயின்ன பகுதியில் மண்மேடு சரிந்து விழ்ந்ததில் 11வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial