பிரான்ஸ் தலைநகரில் பொலிஸ் நிலையமொன்றிற்குள் நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
பெண்ஒருவரைதாக்கியமைக்காக கைதுசெய்ய்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கியை பறித்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் இரண்டு பொலிஸார் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அந்த நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதும் பொலிஸார் பதில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளிற்காக பிரான்ஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Post a Comment